

நாகையில் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற அந்த பொதுக்கூட்டத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.
அப்போது, "திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வருகிறார். மக்கள் இனி அதை நம்பவில்லை. அதிமுகவினர் எங்கு சென்றாலும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பான ஆட்சி வழங்கி வரும் எடப்பாடி பழனிசாமியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், கூட்டணி கட்சியினரும் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.
இன்னும் எஞ்சி இருக்கிற 40 நாட்களில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்குகிற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவுட் ஆகாத பேட்ஸ்மேனாக களத்திலிருந்து 234 ரன்களை அடித்த நாட் அவுட் பேட்ஸ்மேனாகவும், பெருமை பெற்றவராகவும் திகழ்வார்" என பேசி முடித்தார் ஓ.எஸ்.மணியன்.