Skip to main content

மூன்றாவது முறையாக ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா செயலிழப்பு; எந்த மாவட்டத்தில் தெரியுமா?

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
 Strong room CCTV camera failure for third time; Do you know which district?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் சில தினங்களுக்கு முன்பு நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் கடந்த 28/04/2024 அன்று ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன.

இந்நிலையில் தென்காசியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் செயலிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமில் கேமராக்கள் செயல் இழந்த நிலையில் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் கேமராக்கள் இயங்கத் தொடங்கியது. அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெறித்தனமாக கடித்துக் குதறிய தெருநாய்; கல்லூரி மாணவி காயம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
 A stray dog ​​that bit madly; College girl injured

வளர்ப்பு நாய் மற்றும் தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையத் தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் அண்மையாகவே தெருநாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஒரு புறம் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பழனி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை தெரு நாய் ஒன்று வெறித்தனமாக கடித்து குதறும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஹேமா. ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஹேமா, பழனி  தீயணைப்பு நிலையம் அருகே பட்டப்பகலில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலைப் பகுதியில் அங்கு வந்த தெரு நாய் ஒன்று ஹேமாவை கை மற்றும் கால்களை வெறித்தனமாக கடித்துக் குதறியது. அக்கம்பக்கத்தில் மனிதர்கள் இருந்தபோதிலும் தெரு நாய் ஒன்று கல்லூரி மாணவியைக் கடித்துக் பரபரப்பு ஏற்படுத்தியது.

மாணவி ரோட்டிலேயே சுருண்டு விழுந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி அடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட மாணவி ஹேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தீவிரமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் வழக்கு; பாஜகவில் இருந்து அஞ்சலை நீக்கம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Armstrong Case; anjalai Delete  from BJP

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14.07.2024 அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 Armstrong Case; anjalai Delete  from BJP

மீதமுள்ள 10 பேர் பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  இதில் வழக்கறிஞர் ஹரிஹரன் என்பவரும், தாதாவின் மனைவி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த கொலை தொடர்பாக பாஜகவினுடைய வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியிலிருந்த அஞ்சலை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலை நீக்கப்படுவதாக கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அஞ்சலையை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.