Skip to main content

அதிமுகவை விட்டு வெளியேற தயாரான பாஜக... அமித்ஷாவிற்கு சென்ற தகவல்... அதிர்ச்சியில் அதிமுக!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் மேயர் பதவி கேட்டு அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் பாஜக, பாமக, தேமுதிக கட்சியினர் மேயர் பதவி வேண்டும் என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. 
 

admk



மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கழகங்களை விட ஆர்வமாக இருக்கிற பா.ஜ.க. தற்போது மேயர் சீட்டுகளை குறி வைத்து தீவிரமாக இறங்கியுள்ளது.  இதனையடுத்து பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 5 மாநகராட்சியைக் கேட்டு அதில் நான்கையாவது வாங்கி, மூன்று மேயர்களையாவது வெற்றி பெற வேண்டும் என்று அதிகாரத்தோடு கணக்குப்போட்டு வருகிறது. பா.ஜ.க. தலைமை விடுத்த அழைப்பின் பேரில் டெல்லிக்குப் போன கட்சியின் முன்னாள் எம்.பி.யான நரசிம்மன், மேலிடப் பொறுப்பாளர்களைச் சந்தித்து, இதை வலியுறுத்தியுள்ளார். மேயர் பதவிகளை அ.தி.மு.க. நமக்குக் கொடுக்க மறுத்தால், அதன் உறவைத் துண்டித்துவிட்டு நாம் தனியாக களத்தில் நிக்க வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்துச் சொல்லியதாக கூறப்படுகிறது. எடப்பாடி அரசை நாமதான் சப்போர்ட் செய்கிறோம், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை வைத்து, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பெயர் வாங்கிக் கிட்டு இருக்காங்க என்று எடுத்துச் சொல்லியதாக கூறப்படுகிறது. தமிழக பா.ஜ.க.வின் மற்ற சீனியர் தலைவர்களும், இதே கருத்தை வலியுறுத்தி, அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக கூறுகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்