“Jayalalitha went to jail because of DTV's property” - CV Shanmugam

ஜெயலலிதா சிறை சென்றதற்குக்காரணமே டி.டி.வி. தினகரன் தான் என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Advertisment

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், “டிடிவி தினகரன் வைத்திருப்பது கட்சி அல்ல, கூட்டம். அவர் சொல்லுகிறார் பழனிசாமியை நம்பிச் சென்றவர்கள் அனாதைகளாக போய்விடுவார்கள் என்று. டிடிவி தினகரனை நம்பிச் சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்ன. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா சிறைக்குச் சென்றதற்குக் காரணம் டிடிவி தான். ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்ட போது தினகரன் லண்டனில் வைத்திருந்த ஹோட்டலும் சேர்க்கப்பட்டது.

Advertisment

எங்களுக்கு இல்லாத உரிமை டிடிவி தினகரனுக்கு எங்கிருந்து வந்தது. நாங்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நம்பி நின்றவர்கள். கட்சியைக் காப்பாற்றினார். ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் இல்லாத போதும் 75 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளார். உங்களால் எம்.எல்.ஏ. கூட ஆகமுடியவில்லை” எனக் கூறினார்.