Published on 17/08/2020 | Edited on 17/08/2020

தமிழக முதல்வர் பழனிசாமியை, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து பூஜை செய்வதற்கும், சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவை பா.ஜ.க. மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்தச் சூழலில், இவ்விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காகத் தமிழக முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளார் பா.ஜ.க. தலைவர் முருகன். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்த அவர், விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாகக் கோரிக்கை வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.