கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தாசமுத்திரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மேற்கொள்ளப்பட்டு இன்று மாலை மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் வி.அலம்பலம் கிராமத்தில் மின்சாரம் உயர் மின் அழுத்தத்துடன் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 200 வீடுகளுக்கு மேல் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் ஸ்விட்ச் பாக்ஸ்கள் வெடித்து புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மின்துறை ஊழியர்கள் அந்தப் பகுதியில் விரைந்து சென்று மின்சாரம் தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்தப் பகுதியில் மின்சாரத்தால் ஏற்பட்டுள்ள சேதமான பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரே நேரத்தில் 200 வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்ததில் மின்சாதன பொருட்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் மாணவர்கள் இருளில் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.