Skip to main content

 தமிழக மீனவர்கள் விவகாரம்; மத்திய அமைச்சருக்கு ராகுல் காந்தி கடிதம்

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
Rahul Gandhi's letter to Union Minister for Tamil Nadu fishermen issue

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல், 37 மீனவர்களை கடந்த 21ஆம் தேதி கைது செய்தனர். கைதான 37 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஓய்வதற்குள், மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்து அவர்கள், இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பினார். அது மட்டுமல்லாமல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (27-09-24) பிரதமர் மோடியை சந்தித்து, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதிய அந்த கடிதத்தில், ‘எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கை கடற்படையால் கடந்த 21ஆம் தேதி கைதான மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அதிகாரிகளுடன் பேசி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்