தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தற்போது, எதிர்க்கட்சியான திமுக.,வும் தங்களது தொண்டர்களுக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுது என்றதும், ஆளும்கட்சிப் பெரும்புள்ளிகள் பலரும், சீட் வாங்கித் தருகிறோம் என்று கூறி, தற்போது இருந்து விறுவிறுப்பாக வசூல் வேட்டை ஆரம்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் இருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவின் அலுவலகத்தில் இதுக்காகவே ஒரு நீண்ட கியூவே நிற்பதாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் தெரிந்து வைத்துள்ள முதல்வர் எடப்பாடி, இப்படி எல்லாம் நம்ம கட்சி ஆட்கள் வசூல் பண்ணிப் பேரைக் கெடுத்துக் கொள்கிறார்கள் பின்னர் எப்படி சட்டமன்றத் தேர்தலை நம்மால எதிர்கொள்ள முடியும்? பேசாமல் யாராவது வழக்கு போட்டுத் தேர்தலுக்கு ஸ்டே வாங்கிவிட்டால், நாமும் நிம்மதியாக நம்ம பொழப்ப பார்க்கலாம் என்று புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.