Published on 07/05/2019 | Edited on 07/05/2019
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள பதே அனுமன் கோவிலின், இளைய மாடாதிபதியான யோகா குரு ஆனந்த் கிரி யோகா குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு கட்டுரை எழுதிவருகிறார்.இந்த நிலையில் ஆன்மீக வகுப்பு எடுப்பதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்று இருக்கிறார்.
![toga guru](http://image.nakkheeran.in/cdn/farfuture/PgkG7OAe5U0WE7JuSWuu6Qx82owzogQIk5qC_v_1Qtk/1557224185/sites/default/files/inline-images/22_8.jpg)
அங்கு ஆன்மீக பிராத்தனைக்காக இரு பெண்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துள்ளனர்.அப்போது அந்த இரு பெண்களிடமும் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை அவரது குருவும், பதே அனுமன் கோவிலின் மடாதிபதியுமான நரேந்திர கிரி உறுதி செய்துள்ளார்.