Published on 23/03/2021 | Edited on 23/03/2021

உலகம் முழுவதையும் கடந்த வருடம் ஆட்டிவைத்த கரோனா, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தநிலையில் கரோனா காலத்தில் வங்கி தவணைக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும், தவணையை செலுத்த கூடுதல் அவகாசம் தர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், கரோனா காலகட்டத்தில், கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் தவணை செலுத்துவதற்கான அவகாசத்தை 6 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்றம், 2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டியை பிடித்திருந்தால், அதனை திருப்பித்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.