பாட்னாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கும் தருவாயில் இருந்த பெண்மணியின் ஆசையை நிறைவேற்றும் விதாமாக அந்த பெண்ணின் மகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன்பு திருமணம் செய்துவைத்துள்ளது.
பாட்னாவில் உள்ள ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை இந்த திருமணத்தை செய்ய உதவியுள்ளது. கர்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோயால் பதினைந்து நாட்களுக்கு முன்பு அந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மிகவும் மோசமாகி இறக்கும் நிலைக்கு வந்துவிட்டார். அவரது கடைசி ஆசையான மகளின் திருமணத்தை நடத்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு எய்ம்ஸ் அதிகாரிகள் திங்கள் கிழமை மாலை அனுமதியளித்தனர். அதனால் மருத்துவமனை நிர்வாகம் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தது. மறுநாள் புதுமணத்தம்பதிகள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோவிலில் மாலை மாற்றிக்கொண்டு, பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன் வந்து நின்று மந்திரம் முழங்க தாலிகட்ட திருமணம் நிறைவடைந்தது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியது. "இந்த பெண்ணுக்கு கர்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோயால் பத்திக்கப்பட்டு இங்கு சில நாட்களுக்கு முன்பு அனுமத்திக்கப்பட்டார். புற்றுநோயின் தீவிரத்தினால் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என அனைத்து உறுப்புகளும் பாதிப்படைந்துவிட்டது. அவரின் கடைசி ஆசையாக ஏப்ரல் 18 நடைபெறவிருந்த மகளின் திருமணத்தை ஏப்ரல் 3 செய்துவைக்க முடிவு செய்து திருமணத்தை உரிய அனுமதியுடன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன்பு செய்து வைத்துள்ளோம்."