Skip to main content

"சப்பாத்திக்குள்" 2000 ரூபாய் நோட்டு !

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி டி. ரூபா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒர் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.இந்த வீடியோவில் சப்பாத்தி தயார் செய்யும் ஒருவர் ரூபாய் நோட்டு தாள்களை சாப்பாத்தி மாவு உடன் இணைத்து சாப்பாத்தி மாவை அடுப்பில் வைத்து பின் சப்பாத்தி எடுக்கும் போது ரூபாய் 2000 தாள் அப்படியே உள்ளது. 

 

ips roopa twitter


 

ips roopa


 

ips roopa



இதை சப்பாத்தி தயாரிப்பவர் எடுத்து வீடியோவில் காட்டி வரும் காட்சியை ஐபிஎஸ் அதிகாரி டி. ரூபா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைப்பெற உள்ளதால் இத்தகைய முறையில் பணப்பட்டுவாடா செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வீடியோ "TIKTOK" செயலி மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

 

பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்