Skip to main content

பாலியல் புகாா்... சிபிஎம் மாநில செயலாளா் மகன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்!

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

கேரளா மா.கம்யூனிஸ்ட் செயலாளா் கோடியோி பாலகிருஷ்ணன் மகன் பினோய் கோடியோி துபாயில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2009-ல் துபாயில் உள்ள ஒரு பாாில் டான்ஸராக இருந்த பீகாரை சோ்ந்த 33 வயது கொண்ட இளம் பெண்ணுடன் பினோய் கோடியோிக்கு தொடா்பு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனா்.
     

Sexual complaint ... notices for CPM state secretary's son

     

இந்த பழக்கம் நாளடைவில் அவா்களுக்குள் உடல் ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் 2010-ல் அந்த பெண்ணுக்கு ஓரு ஆண் குழந்தை பிறந்ததாம். அதன் பிறகு பினோய் கோடியோி அந்த பெண்ணிடம் தொடா்பை நிறுத்தியுள்ளாா். மேலும் பினோய் கோடியோிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் அந்த இளம் பெண்ணுக்கு தொிய வந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓஷிவாரா காவல் அதிகாாி அந்த இளம் பெண் கொடுத்த புகாாின் விசாரணைக்கு நோில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பினோய் கோடியோிக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இதற்கிடையில் இன்று பினோய் கோடியோி கண்ணூா் எஸ்பியிடம் அந்த இளம்பெண் என்னிடம் 5 கோடி கேட்டாா் அதை நான் கொடுக்க மறுத்ததால் என் மீது தவறான குற்றச்சாட்டை கூறி என்னை அசிங்கப்படுத்த முயலுகிறாா். எனவே அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகாா் கொடுத்துள்ளாா்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள் - பயணிகள் அதிர்ச்சி

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Coaches derailed from Kerala Ernakulam Express train

கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் நேற்று(28.6.2024) காலை எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு சாலக்குடியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் 20 பெட்டிகள் உள்ள நிலையில் அதில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். காலை 10 மணியளவில் வள்ளத்தோடு பாலம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக ரயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்று தனியாகச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செயல்பட்டு என்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். பாலத்தைக் கடக்க ரயிலின் வேகம் குறைக்கப்பட்டதால், கழன்று சென்ற ரயில்பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாகவே நின்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சூர்,பாலக்காடு ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் கழன்ற சென்ற ரயில் பெட்டிகளை மற்றொரு ரயில் என்ஜின் உதவியோடு இழுத்து வந்து, சம்பந்தப்பட்ட ரயிலுடன் இணைத்தனர். இதையடுத்து 4 மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. 

இதுகுறித்து பேசிய ரயில்வே உயர் அதிகாரிகள், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து பெட்டிகள் கழன்று  சென்றது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிபிஎம் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம் - சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Tirunelveli CPM Office incident CM explanation in the 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது குறித்த கவன ஈர்ப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 13-6-2024 அன்று இருவேறு சமூகத்தைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதுதொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்திலே பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, மணப்பெண்ணின் குடும்பத்தினர் கடந்த 14-6-2024 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, இதுகுறித்துக் கேட்டு, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள். 

Tirunelveli CPM Office incident CM explanation in the 

இச்சம்பவம் தொடர்பாக, அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் 7 பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; 7 ஆண்கள் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். விசாரணையில் இச்சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாகச் தெரியவந்ததையடுத்து, இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூகநீதிக் கொள்கையைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், பெண் கல்வி, சமஉரிமை, சாதி மறுப்புத் திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பக்காலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கமாகும். இதனை இந்த அவையில் உள்ள அனைவரும் அறிவார்கள். நமது அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூகக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இதுபோன்ற இனங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கித் தரப்படுகிறது. 

Tirunelveli CPM Office incident CM explanation in the 

இதற்கென ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதைவிட, தற்போது இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையிலுள்ள சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது. அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில், அதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்களில்கூட விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் வாங்கித் தரப்பட்டு வருகின்றன” எனப் பேசினார்.