ஒன்பது மணிநேரம் தொடர்ந்து தூங்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக தூக்கம் குறித்து ஆராய்ச்சி செய்யும் பெங்களூர் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
பெங்களூரில் வேக்எபிட் நிறுவனத்தின் இயக்குனர் சைதன்யா ராமலிங்க கவுடா இதுபற்றி கூறுகையில், வாழ்க்கை மற்றும் வேலையை சரியான விகிதத்தில் நிர்வகித்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதுதொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வருவதால் இந்த ஆராய்ச்சிக்காக ஆழ்ந்து உறங்க கூடிய நபர்கள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தூங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதி அளிக்கப்படும் என்றும், நூறு நாட்களுக்கு இரவில் படுக்கையில் படுத்து குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 9 மணி நேரமாவது உறங்க வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது பைஜாமா உடையை மட்டுமே அணிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இப்படி 100 நாட்கள் தூங்க போகும் நபர் மடிக்கணினி பயன்படுத்தக்கூடாது என்றும், 100 நாட்கள் வெற்றிகரமாக தூங்கினால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.