இந்தியா முழுவதும் கரோனாபாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கர்நாடகா மாநிலத்திலும் தினசரி கரோனாபாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது.அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சரும்கர்நாடகா மூன்றாவது கரோனாஅலைக்குள் நுழைந்திருப்பதாகத்தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்இந்திய புள்ளியியல் நிறுவனத்தைச் சேர்ந்தசிவ ஆத்ரேயா மற்றும் இந்திய அறிவியல் நிறுவனத்தைசேர்ந்த ராஜேஷ் சுந்தரேசன் ஆகிய இரு ஆய்வாளர்களும் நடத்திய ஆய்வில், கரோனாபரவல் என்பது நல்ல நிலையில் இருந்தால் பிப்ரவரி மாதத்தில் கர்நாடகாவில் தினசரி 40 ஆயிரம் பேருக்கு கரோனாஉறுதி செய்யப்படும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை நிலைமை மோசமானால், கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 1.3 லட்சம் கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் எனவும் அந்த ஆய்வு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.