ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இது வரும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள் அதிகமான சலுகைகளை அள்ளி வழங்குவதாகவும், அதனால் உள்நாட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மத்திய வர்த்தக அமைச்சகம் கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது. ஃப்லிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் அவை பங்கு வைத்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்கவும் தடை விதித்துள்ளது. ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் கேஷ் பேக் சலுகைகள் நேர்மையாக இருக்க வேண்டும், எவ்வித பாகுபாடுகள் மற்றும் முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பொருள் தங்கள் நிறுவனங்களில் மட்டுமே பிரதேயகமாக விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.