Skip to main content

“கருத்துரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடு தேவையில்லை” - உச்சநீதிமன்றம் அதிரடி

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

supreme court judgement  Freedom of opinion needs no further restraint

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அசாம் கான் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தினைத் தெரிவித்திருந்தார். இவரின் இந்தக் கருத்துக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், மக்கள் பிரதிநிதிகளுக்கு பேச்சுரிமையில் கட்டுப்பாடு வேண்டும் எனப் பலரும் தெரிவித்தனர். 

 

உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரம் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், பேச்சு மற்றும் கருத்துரிமையைக் கட்டுப்படுத்த கூடுதல் விதிகளை அமல்படுத்த தேவையில்லை. அரசியலமைப்பு பிரிவு 19 உட்பிரிவு 1 மற்றும் 2-ன் கீழ் தற்போது எந்தெந்த விதிகள் இருக்கிறதோ, அந்த விதிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொருந்தும். மக்கள் பிரதிநிதி வெளியிடும் அறிக்கைக்கு அவரே முழு பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட அமர்வில் 4 பேர் ஒரு தீர்ப்பும், ஒருவர் மாறுபட்ட தீர்ப்பும் வழங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக நீடித்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது' - அகிலேஷ் பேச்சு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
'Youngsters will not get married if BJP rule continues' - akilesh yadav speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிய இருக்கிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது எனப் பேசி உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த நிலையில், சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் நடைபெற்ற ஹோலி விழாவில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அரசு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதால் உத்தரப் பிரதேசத்தில் அரசுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வயதாகிவிடும். அதனால் அவர்களுக்கு திருமணம் நடக்காத சூழல் கூட ஏற்படும்' எனக் கடுமையாக விமர்சித்தார்.

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.