Published on 22/04/2022 | Edited on 22/04/2022

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று இந்தியா வந்த போரிஸ் ஜான்சன் முதற்கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சென்று, அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்பு குறித்து விவாதித்தார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் போரிஸ் ஜான்சனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரை அணிவகுப்புடன் நடந்த இந்த வரவேற்பில் பிரதமர் மோடி நேரில் கலந்துகொண்டு போரிஸ் ஜான்சனை வரவேற்றார்.