திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார், சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதில் வல்லவர். பாஜகவைச் சேர்ந்தவரான இவர் பேசுச்சு, தேசிய பாஜக தலைவர்களுக்கே பெரும் தர்மசங்கடங்களை ஏற்படுத்தும் அளவிற்கு பேசியிருக்கிறார்.
சர்ச்சை 1, மஹாபாரத காலத்திலேயே இந்த இணையசேவை அனைத்தும் வந்துவிட்டது என்றார். சர்ச்சை 2, சிவில் எஞ்சினியர்கள் மட்டும்தான் சிவில் சர்விஸ் தேர்வு எழுத வேண்டும். அது மெக்கானிக்களுக்கானது அல்ல என்றார். இப்படி அவர் மனம்போன போக்கில், அடித்துவிடுவார்.
இந்நிலையில், ருத்ரசாகரில் நடந்த படகுப்போட்டியை தொடங்கி வைத்த பின் பேசிய பிப்லப் குமார் தேவ் மீண்டும், "வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். தண்ணீர் மறு சுழற்சியாகும். இதன் மூலம் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இயற்கை சூழலுக்கு இது மிகவும் உகந்தது. ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும்’’ என்று சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.