Published on 07/07/2023 | Edited on 07/07/2023
![rahul gandhi case gujarat high court today judgement](http://image.nakkheeran.in/cdn/farfuture/A-clEh0bWX00yPc78GJS8-Wqgm-M1YSKw4JCBkzAnSI/1688699258/sites/default/files/inline-images/rg-1.jpg)
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவர் எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து இரண்டாண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.