டெல்லியிலுள்ள துவாரகா பகுதியில் சர்வதேச மாநாடு மற்றும் ஏற்றுமதி மையம் (ஐஐசிசி) அமைப்பதற்கான நிகழ்ச்சியில் மோடி நேற்று பங்கேற்று, அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏர்போர்ட் மெட்ரோ ரையிலில் பயணிகளுடன் பயணியாக பயணித்தார் மோடி.
அடிக்கல் நாட்டியன் பேசிய மோடி, “ என்னுடைய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். ஒன்றை உறுதியளிக்கின்றேன், இது மக்களுக்கான அரசு. கடந்த 4 வருடத்தில் மக்களின் நலனுக்காக பல்வேறு கடினமான நடவடிக்கை எங்கள் அரசால் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் இனிவரும் காலங்களிலும் தொடரும். கடினமான முடிவுகள் நின்றுவிடாது, தொடர்ந்து எங்கள் அரசால் எடுக்கப்படும்” என்றார்.
மேலும்,” நாட்டின் பொருளாதாரம் சர்வதேச சவால்களை எதிர்கொண்டு, தற்போது 8 சதவீதத்திற்கு வளர்ந்து வருகிறது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும். அடுத்த 10 ஆண்டுகளில் இது 10 லட்சம் கோடி டால்ராக உருமாறும்” என்று கூறினார். பின்னர், இந்திய பொருளாதாரத்தை பற்றியும், அதன் வளர்ச்சியை பற்றியும் கூறியுள்ளார்.