![y](http://image.nakkheeran.in/cdn/farfuture/fP0dC7-kIsd696gaazAiCMWXwGG9vYVYC_-CPbogPlE/1589457954/sites/default/files/inline-images/hg_3.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை இரண்டு கட்ட ஊரடங்கு முடிந்துள்ள நிலையில், தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கரோனாவின் தாக்கம் இருந்து வரும் நிலையில், தற்போது சில மாநிலங்களில் அதன் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றது.
அந்த வகையில் நாகாலாந்து மாநிலத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுவதும் சரியாகியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக அம்மாநில தலைமை செயலாளர் தெம்ஜென்டாய் பேசியதாவது, "கரோனா பாதிப்பில்லாத மாநிலமாக நாகாலாந்தை தக்க வைப்பது மிகவும் சவாலாக இருக்கின்றது. மாநில அரசின் இணையதளங்களில், வெளிமாநிலங்களில் இருக்கும் நாகாலாந்தை சேர்ந்தவர்கள் மீண்டும் மாநிலம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் 18,000 பேர் மீண்டும் மாநிலம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். ஆனால் நாங்கள் அவர்களை அங்கேயே இருக்க சொல்லியிருக்கிறோம். அவர்களுடைய வங்கி கணக்கில் 10000 ஆயிரம் பணம் போடப்படும் என்றும் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.