Published on 07/11/2018 | Edited on 07/11/2018

இன்று காலை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள டேராடூன் சென்றார். கேதார்நாத்தில் முகாமிட்டுள்ள ரானுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். டெல்லியிலிருந்து டேராடூனுக்கு விமானம் மூலம் வந்தடைந்தார், கேதார்நாத்தில் தீபாவளி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். கேதார்நாத் ராணுவமுகாம் கடல்மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. ராணுவவீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதே தமது விருப்பம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இன்று கேதார்நாத்தில் சுமார் 5000 ராணுவவீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்நிலையில் பிரதமர் மோடி கேதார்நாத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பின்னர் தற்போது அங்கிருந்து கிளம்பிவிட்டார்.