Published on 19/01/2019 | Edited on 19/01/2019

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் எல்லாம் இணைந்து மகா கூட்டணியை அமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ எனும் பொதுக்கூட்டம் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிதான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும்’ என தெரிவித்தார்.