கர்நாடக மாநிலம் சித்தகுர்கா மாவட்டத்தில் உள்ள தொட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகாஜூனே. இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பெரிய வெங்காயம் பயிரிட்டு வந்துள்ளார். இந்த ஆண்டு வெங்காயத்தின் விலை உயர வாய்ப்புள்ளது என்று சில மாதங்களுக்கு முன்பே கணித்த அவர், தன் தோட்டத்துக்கு அருகில் இருந்தவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மேலும் 10 ஏக்கருக்கு வெங்காயம் பயிரிட்டுள்ளார்.

இதற்காக அவர் 20 லட்சம் கடன் வாங்கினார். கடந்த ஆண்டு கிடைத்த 5 லட்சம் லாபம், இந்த ஆண்டு இரண்டு மடங்காகும் என்ற நினைப்பில் அவர் வெங்காயத்தை பயிரிட்டுள்ளார். இந்நிலையில், அவர் எதிர்பார்த்ததை போல இந்த ஆண்டு வெங்காய விலை டாப்பில் போக அவர் மகிழ்ச்சியுற்றார். மேலும் அவர் நிலத்தில் இருந்து மட்டும் 250 டன் அளவுக்கு வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பினார். இதன் மூலம் அவர் ஒரு கோடி ரூபாய் சம்மாதித்துள்ளார்.