Published on 30/01/2022 | Edited on 30/01/2022

இந்தியா- இஸ்ரேல் நட்புறவு வரும் காலங்களில் புதிய மைல் கல்லை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான 30 ஆண்டுகால உறவைக் குறிக்கும் வகையில், மும்பை கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் இரு நாடுகளின் தேசிய கொடிகளும் காட்சிப் படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், 30 ஆண்டுகால நட்புறவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பல நூற்றாண்டுகளாக இந்தியா- இஸ்ரேல் மக்களுக்கிடையே வலுவான உறவு உள்ளது. உலகம் முக்கிய மாற்றங்களை காணும் போது இந்தியா- இஸ்ரேல் இடையேயான உறவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். இந்தியா- இஸ்ரேல் இடையேயான நட்புறவு வரும் காலங்களில் புதிய மைல் கல்லை எட்டும்" எனத் தெரிவித்தார்.