Skip to main content

கேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
fhj


இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது. இன்று மட்டும் கேரளாவில் 488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6,950 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இருவர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 2,957 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 16 ஹாட்ஸ்பாட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று 143 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,963ஆக உயர்ந்துள்ளது. 1,77,769 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

 

சார்ந்த செய்திகள்