UP

Advertisment

இந்தியாவில் பெரிய மாநிலமாக பார்க்கப்படும் உத்திரபிரதேசத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை யோகி ஆதித்தநாத் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அனுமதியில்லாத ஆடு,மாடு வெட்டும் இறைச்சி கடைகளை மூடியது, பெண்கள் பாதுகாப்பிற்காக ரோமியோ ஸ்கொட் எனும் காவல்துறை அதிரடிப்படை கொண்டுவந்ததுஎன பல முயற்சிகளை உத்திரப்பிரதேச அரசு எடுத்துள்ளது.

மேலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வரும் ஜூலை 15 தேதியிலிருந்து பிளாஸ்டி பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் சரியாக பணியாற்றுவதில்லை என்ற குற்றச்சாற்று பலநாட்களாக தொடர்ந்து வர அதற்கும் முற்றுப்புள்ளி வைக்க அரசு அலுவலகங்களில் இனி சரியாக பணியாற்றாத 50 வயதிற்கும் மேற்றப்பட்டவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பான நோட்டீஸ் கூடுதல் தலைமை செயலரிடம் இருந்து உபியிலுள்ளஅனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பபட்டுள்ளது. அந்த நோட்டீஸில் இந்த முறையானது 1986-ல் லிருந்து நடைமுறையில் இருந்து வந்ததாகவும் ஆனால் பெரிதாக அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படவில்லை என்றலும் இனி தீவிரப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.