Published on 29/12/2019 | Edited on 29/12/2019
கேரளா மாநிலம் திரிச்சூரை சேர்ந்த அரசு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த 67 வயது மணமகன் கொச்சானியன், 65 வயது மணமகள் லட்சுமியை காதலித்து கரம்பிடித்தார்.
கேரளாவில் நடந்த இந்த திருமணத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் இதே ஜோடி தங்களது 19 / 17 பருவ வயதில் காதலித்துள்ளனர். ஆனால் அப்போது சூழ்நிலை காரணமாக வேறு ஒருவருக்கு லட்சுமி மணமுடித்து வைக்கப்பட்டார். பின்னர் லட்சுமியின் கணவன் இறந்துவிட ஆதரவற்ற நிலையில் கேரள அரசின் முதியோர் இல்லத்திற்கு வந்த லட்சுமி தனது முதல் காதலனான கொச்சானியனை கண்டுள்ளார். அதன்பிறகு தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.