/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fj_2.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 36 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 46,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584956668553-0'); });
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584957472633-0'); });
இதன் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு கால வரையின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் மாணவர்களின் இறுதி தேர்வுகள்கூட இன்னும் நடத்தப்படாத நிலையே இருக்கின்றது. ஒரு சில தனியார் பள்ளிகள் ஸ்மார்ட் ஃபோன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தாலும் பெரும்பாலான மாணவர்கள் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவர் பணி முடிந்ததும் கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். "விரைவில் பள்ளி தொடங்கினால் மாணவர்கள் அடுத்த வகுப்பிற்கு செல்ல தேர்வுகளுக்கு தயாராக இருக்கும் வகையில் தன்னால் முடிந்த அளவு அவர்களுக்கு பாடத்தை சொல்லிக் கொடுக்கிறேன்" எனஅவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முயற்சிக்கு அந்த கிராம மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)