Published on 07/02/2019 | Edited on 07/02/2019
![i](http://image.nakkheeran.in/cdn/farfuture/Bz9u3Lyqy_KcGunD56d5vAhs63PpIfz1um9PGE6ZX9k/1549544388/sites/default/files/inline-images/il%26fs.jpg)
உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனமான ஐ.எல். மற்றும் எஃப்.எஸ் கடந்த சில காலங்களாகவே பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது, கெயில் நிறுவனம் இந்நிறுவனத்துடன் செய்திருந்த ரூ. 166 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இரத்து செய்துகொள்வதாக அறிவித்துள்ளது.
கெயில் இந்தியா நிறுவனம், குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை எடுத்து செல்லும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்கான 124 கி.மீ தொலைவிற்கான திட்டத்தை ரூ. 166 கோடி மதிப்பில் ஐ.எல் மற்றும் எஃப்.எஸ் நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்துகொள்வதாக கெயில் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.