Published on 16/09/2022 | Edited on 16/09/2022
கேரளாவில் ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்துவதற்கு உதவியதாக இண்டிகோ நிறுவனத்தின் மூத்த நிர்வாகி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்கர் அலி என்பவர், துபாயில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் விமானம் மூலம் கேரளா வந்தடைந்தார். இவர் பிற உலோகத்துடன் மறைத்து எடுத்து வந்த 4.9 கிலோ எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி சஜித் ரஹ்மான் மற்றும் முகமது சமீர் ஆகியோர் தங்கத்தைக் கடத்துவது தெரிய வந்தது.
சம்பந்தப்பட்ட பயணியின் உடைமைகளைப் பரிசோதனை செய்யக் கூடாது என்பதற்காக, உள்நாட்டு விமானத்தில் பயணித்தது போன்று இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்கள் மாற்றியதை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் அதிகாரிகள் கண்டறிந்தனர்.