தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் ரேகா சர்மாவை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, தனது எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மஹுவா மொய்த்ராவை புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்து, அடுத்த மூன்று நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது.
தேசிய மகளிர் ஆணையத்தின் கருத்திற்கு, “டெல்லி போலீசார் என்னை மூன்று நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றால், நான் படியா பகுதியில் தான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். இந்த நிலையில்தான் டெல்லி போலீசார், மஹுவா மொத்ரா எம்.பி. மீது புதிய குற்றவியல் சட்டப் பிரிவு 79-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே ரேகா சர்மா வெளியிட்டிட்டிருந்த சில சர்ச்சைக் குரிய பதிவுகளை பகிர்ந்த மஹுவா மொய்த்ரா, என் மீது வழக்குப்பதிவு செய்யும் அதேசமயத்தில் மற்றொரு குற்றவாளிக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.