![Rs 19,500 crore for farmers - Prime Minister Narendra Modi to release tomorrow!](http://image.nakkheeran.in/cdn/farfuture/LE41It7N0AfuggCbVAoYmxMKG3phTl0Ed_VImFWPyQc/1628400826/sites/default/files/inline-images/narendra%20modi333.jpg)
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் கிஷான் சம்மன் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) என்ற திட்டம் மூலம் ஆண்டுதோறும் 6,000 ரூபாயை மத்திய அரசு, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டம் கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், 9- வது தவணையாக 9.75 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 19,500 கோடியை நாளை (09/08/2021) காலை 11.00 மணிக்கு நடக்கும் காணொளி நிகழ்ச்சியில் டெல்லி இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி விடுவிக்கிறார். அப்போது விவசாயிகளுடன் காணொளி மூலம் பிரதமர் கலந்துரையாட உள்ளதாக தகவல் கூறுகின்றன.
நான்கு மாதத்துக்கு ஒருமுறை ரூபாய் 2,000 என விவசாயிகள் வங்கி கணக்கில் இதுவரை ரூபாய் 1.38 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.