Skip to main content

ஆளுநரைத் திரும்பப் பெற 50 லட்சம் கையொப்பம்; ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்த வைகோ

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

vaiko handed over at the Presidential Palace for 50 lakh signatures to recall Governor;

 

தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது; மசோதாக்களைக் கிடப்பில் போடுவது; அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாகச் செயல்படுவது; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர், அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

 

அதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், கூட்டணிக் கட்சி தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 19 பக்க கடிதம் எழுதியிருந்தார். 

 

இந்த நிலையில் மதிமுக சார்பில் ஆளுநரை நீக்குவது குறித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த கையெழுத்து இயக்கத்தில், மாநிலம் முழுவதும் உள்ள எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டன. இந்த ஆவணங்களைப் பெட்டிகளில் வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க கொண்டு வந்தனர்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும், தமிழ்நாடு அரசுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால் அவரைத் திரும்பப் பெற வேண்டும். இதில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 35 சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் கையெழுத்தைப் பெற்றிருக்கிறோம். இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் நேரில் ஒப்படைக்க சில தினங்களாக அனுமதி கேட்டபோது அது நிராகரிக்கப்பட்டது என்று எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிய வந்தது. இருப்பினும், எப்போது அனுமதி வழங்கினாலும் 50 லட்சம் பிரதிநிதிகளின் கையெழுத்து படிவங்களை நேரில் சென்று ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

 

இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வைகோவிற்கு நேற்று பிற்பகல் அனுமதி வழங்கப்பட்டதால், தமிழக ஆளுநரை நீக்குவது தொடர்பான 50 லட்சம் பிரதிநிதிகளின் கையெழுத்து அடங்கிய படிவங்களை ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

'நாடே வணங்குகிறது' - குடியரசு தலைவர் பெருமிதம்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

 'The country bows down' - the President of the Republic is proud

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் கடந்த 12 ஆம் தேதி (12/11/2023) காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாகச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பணியிலிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர். இந்த சம்பவத்தில் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி சுமார் 17 நாட்களாக நடைபெற்று, இன்று உண்மையிலேயே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

ஒரு தொழிலாளரை வெளியே அழைத்து வர 5 நிமிடங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இதனை கொண்டாடும் வகையில் அந்த பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இந்த மீட்புப் பணி முற்றிலுமாக வெற்றி அடைந்துள்ளது என தேசிய பேரிடர் மீட்புப்படை அறிவித்துள்ளது.

 

nn

 

அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகின்றனர். மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக பாடுபட்ட தொழிலாளர்களை நாடே வணங்குகிறது. அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் உத்தரகாண்ட் மாநில முதல்வர் தாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஒருங்கிணைந்த முயற்சியால் தான் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மீட்புப் பணிகளுக்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்தனர். இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும், மீட்புப் படையினருக்கும் நன்றி' என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஆளுநரின் விழாவை புறக்கணித்த பேராசிரியர்கள்! சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளாத நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இதனையேற்று பல்கலை. செனட் மற்றும் சிண்டிகேட் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.

 

இதனிடையே, ஆளுநரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில், மதுரை வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று காமராஜ் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டங்களைப் பெற்றனர். அதே நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர்  ஆளுநர் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர். 

 

Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP

 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்