நாடு முழுவதும் புதியதாக நான்கு வெளிநாட்டு தூதரகங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் 17 சுற்றுலா தளங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும். என்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்; 180 நாட்கள் காத்திருப்பு தேவையில்லை. பார்வையற்றோரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் ரூபாய் 1, 2, 5,10,20 நாணயங்கள் வெளியிடப்படும். வங்கிகளின் வாராக்கடன் ரூபாய் 1 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்காக ரூ.70,000 கோடி நிதி வழங்கப்படும். முத்ரா தொழில் கடன் திட்டத்தின் கீழ் ஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம் வீணடிக்கப்படுவதை தவிர்க்க 25 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக சுமார் ரூபாய் 18,341 கோடி மிச்சப்படுத்தப்படுள்ளது. வீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். பொறுப்பாக வரி செலுத்துவோர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசின் நேரடி வருவாய் சுமார் ரூபாய் 11.37 லட்சம் கோடியாக உயர்வு. மின்சார வாகனங்களை வாங்குவோர்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பு.