Published on 21/08/2018 | Edited on 21/08/2018

உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்நாத் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் நாளை பசுக்களை கொல்லகூடாது எனவும் அதற்கான நடவடிக்கையை போலீசார் எடுக்கவேண்டும் என போலீசாருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஏற்கனவே பசு காவலர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு பசு மாட்டை கொல்வது குற்றம் என கூறி பலர் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் உள்ளனர். இதனை தொடர்ந்து நாளை பக்ரீத் கொண்டாட இருப்பதால் மத்திய பிரதேச மாநிலத்தில் முக்கிய மாவட்டங்களில் பல இடங்களில் பசு மாடுகள் கறிக்காக வெட்டப்படும் எனவே அதை தடுக்க வேண்டும் எனவே சிறப்பு ரோந்துகள் மேற்கொள்ளவேண்டும் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்நாத் உத்தவிரட்டுள்ளார்.