Published on 14/08/2019 | Edited on 14/08/2019
இந்தியா முழுவதும் சேவையாற்றும் ஆங்கில மருத்துவ டாக்டர்களில் 57 சதவீதம் பேர் போலிகள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆங்கில வழி மருத்துவம் பார்ப்பவர்கள் முறையாக படிப்பை முடித்து, இந்திய மருத்துவ கவுன்சிலில் அவர்கள் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவ கவுன்சிலில் நாடு முழுவதும் 11 லட்சத்து 46 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் இவ்வாறு முறைப்படி மருத்துவ கல்வியை முடிக்காமல் நாடு முழுவதும் ஏராளமான போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இந்த தகவலின்படி நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களில் 57.3 சதவீதம் பேர் முறைப்படி படிக்காதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.