Skip to main content

விஜயகாந்த் உடல்நிலை - பிரேமலதா விளக்கம்

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
v

 

சிகிச்சை தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.  இந்நிலையில்,  விஜயகாந்த் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது என்று  செய்திகள் வந்தது.  தினமும் அமெரிக்காவிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம்  இங்கிருப்பவர்களிடம் பேசும் வழக்கத்தை கொண்ட விஜயகாந்த்,   நேற்று பேசவில்லை.  அத்துடன் அவரது மச்சான் சுதீஷ் நேற்று அவசரமாக தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.  இதையடுத்து விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வெளியான செய்தி தேமுதிக தொண்டர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

 

இதன்பின்னர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருப்பதாக படங்கள் வெளியாகியது.  அதையடுத்து தொண்டர்கள் நிம்மதி அடைந்தனர்.

 

நடந்த  என்ன என்பது குறித்து அமெரிக்காவில் உள்ள தமிழ் நிருபர்கள் பிரேமலதாவை தொடர்புகொண்டு கேட்டதாகவும்,  அதற்கு  பிரேமலதா, கேப்டனுக்கு தைராய்டு பிரச்சனை.   இன்னமும் கேப்டனுக்கு சிகிச்சை ஆரம்பிக்கவில்லை.   இன்னும் இரண்டு நாட்கள் கழித்துதான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். தற்போது அமெரிக்காவில் விடுமுறை ஓய்வில்தான் இருக்கிறார் என தெரிவித்ததாக அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

சென்னையிலும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனிடம் தந்தையின் உடல்நிலை குறித்து  செய்தியாளர்கள் கேட்டதற்கு,  அப்பாவுக்கு தொண்டையில் தைராய்டு பிரச்சனை உள்ளது.  அதற்காக அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.  மற்றபடி ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.


 

v

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கேப்டன் நேரில் வருகை' - வெளியான வீடியோவால் தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனமான விஜயகாந்த் மறைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் அவருடைய  நினைவிடத்தில் மலர் தூவி பூஜை செய்து வருகின்றனர். அதேபோல் தினமும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (18/06/2024) செவ்வாய்க்கிழமை திடீரென தேமுதிக அலுவலகத்தில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பாம்பு ரூபத்தில் வந்திருப்பதாகத் தெரிவித்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர் தேமுதிக தொண்டர்கள்.

பின்னர் சிறிது நேரம் அலுவலக வளாகத்திலேயே ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு பின்னர் அங்கிருந்து வெளியே தப்பி சென்றது. இந்த வீடியோவை தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தொடங்கி வைத்த 'கேப்டன் நியூஸ்' இணையதளபக்கத்தில் வெளியிடப்படுள்ளது. அதில் 'இன்று தலைமை  கழகத்திற்கு கேப்டன் நேரில் வருகை' எனக் கேப்சன் கொடுக்கப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், 'செவ்வாய்க்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் எந்த வழியாக அலுவலகத்திற்கு வருவாரோ அதே வழியில் நாகம் வந்து, அவர் அமர்ந்திருந்த அறைக்கு சென்று, அங்கிருந்து வெளியேறியது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

விஜயகாந்தின் சமூக வலைத்தளப் பக்கம் ஹேக்! 

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
vijayakanth faceboook page hacked

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தேமுதிக நிறுவனத் தலைவரராகவும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

இவரது நினைவிடத்தில் 125 நாட்களில் சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளதாக ‘லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. அதனைப் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 9ஆம் தேதி  டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ கையால் பெற்றுக்கொண்டார்.  

இந்த நிலையில் விஜயகாந்தின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவரது பக்கத்தில் வழக்கமாக அவருடைய கட்சி தொடர்பான செய்திகளே வெளியாகி வந்த நிலையில் தற்போது சம்மந்தமில்லாத சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.