Skip to main content

“என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்” - கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Woman complains that her husband is trying to incident her

ஈரோடு இடையன் காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவரது கணவர் சந்திரசேகர். பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று(26.6.2024) காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சுகந்தி திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுகந்தியை தனியாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர், “தனது கணவர் தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார். முதலமைச்சர் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறினார். இதனை அடுத்து சுகந்தியை போலீசார் விசாரணைக்காக சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது சுகந்தி கூறும் போது, “கடந்த அக்டோபர் மாதம் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தனது மாமியாரும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது என்னை எனது கணவர் கொலை செய்ய முயற்சிக்கிறார்” என்றார். 

இது  தொடர்பாக புகார் அளியுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று அவர் புகார் அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சத்தியமங்கலம் அருகே இளம் பெண் தீ குளித்து தற்கொலை!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Young woman lost their near Sathyamangalam

ஈரோடு மாவட்டம், சிக்கரசம்பாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் தவமணி (19). இவருக்கு கடந்த பிப்ரவரியில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(26) என்பவருடன் திருமணமானது. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக தவமணி சுரேஷை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். தவமணிக்கு வலிப்பு நோய் இருப்பதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக தவமணிக்கு மன உளைச்சலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பெரியூரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற தவமணி சம்பவத்தன்று இரவு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தவமணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து, சத்திமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தொடர் மழை; ஒரே நாட்களில் 2 அடி உயர்ந்த பவானிசாகர்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
continuous rain;  Bhavanisagar rose 2 feet in a single day


ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை  5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இன்று (28/06/2024) காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5,894 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 62.44 அடியாக உயர்ந்து உள்ளது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.93 அடியாக உள்ளது. அதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.57 அடியாக உயர்ந்து உள்ளது.