Skip to main content

ராணி உடலுக்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

The person who was guarding the Rani's body suddenly fainted and there was a stir

 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் உயிரிழந்துள்ளார். கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர். பிரிட்டன் ராணி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு உலகத் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

மறைந்த ராணியின் உடல் நேற்று பக்கிங்காம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வெஸ்ட்மிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல், இறுதிச்சடங்கு நடைபெறுகிற நிலையில், 19-ந் தேதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை பார்த்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக முழு நேர காவல் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் அங்கு நின்று இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரம் தள்ளாடிய படியே நின்று கொண்டிருந்த அந்த காவலர் நிலைக்கொள்ளாது மயங்கி விழுந்தார். அருகில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எலிசபெத் ராணியை கொல்ல சதி; இந்தியருக்கு சிறை தண்டனை

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Indian jailed because Queen of England

 

இங்கிலாந்து எலிசபெத் மகாராணியை கொல்ல முயன்ற இந்திய வம்சாவளிக்கு இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

 

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த 2022ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது, அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் போலீஸார் கைது செய்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்துள்ளார். 

 

21 வயதான இவர், கடந்த 2021ஆம் ஆண்டில், இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் சட்டவிரோதமாக நுழைய முயன்றார். முகத்தில் முகமூடி அணிந்து அந்த அரண்மனையில் ஊடுருவிய ஜஸ்வந்த சிங்கை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தை கொலை செய்ய வந்ததாக தெரிவித்தார். மேலும், கடந்த 1919ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் ராணி எலிசபெத்தை கொல்ல வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினர் ஜஸ்வந்த் சிங்கை கைது செய்தனர். 

 

இதனையடுத்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதால், அவருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

இந்திய மக்களை உளவு பார்க்கும் மோடி அரசு;  வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Modi government spying on Indian people

 

140 கோடி இந்திய மக்களின் தரவுகள் மற்றும் தகவல்தொடர்புகளை  மோடி அரசு கண்காணிப்பு கருவிகளை கொண்டு  உளவு பார்த்து வருவதாக லண்டனில் உள்ள ஆங்கில பத்திரிக்கை ஒன்று குற்றச்சாட்டு வைத்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரின் செல்போனில் இருந்து  அவர்களின் தரவுகளை மோடி அரசு உளவு பார்த்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை இஸ்ரேலில் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்ப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது. 

 

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் செல்போனை மோடி அரசு ஒட்டுக்கேட்பதாகவும்,  ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும், அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சியினர் பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மோடி அரசு பதில் எதுவும் தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது.

 

இந்த நிலையில், லண்டனில் உள்ள பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் மோடி அரசு உளவு பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் மற்றும் காக்னைட் என்ற நிறுவனத்திடமிருந்து மோடி அரசு அதிநவீன உளவுக் கருவி வாங்கியுள்ளது. அந்தக் கருவிகளை கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களில் பொறுத்தி மக்களின் தரவுகள் திருடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதை வைத்து, ஒட்டுமொத்த 140 கோடி இந்திய மக்களின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள், குறுந்தகவல்கள், ஈ.மெயில்கள், ஆகிய தரவுகள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணைய தகவல்கள் முதற்கொண்டு இந்த கருவி முலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டின் செப்டியர் நிறுவனம் தனது உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, மற்றும் சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.