Skip to main content

இங்கிலாந்து நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு: இந்திய சகோதரர்கள் முதலிடம்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

2019ஆம் ஆண்டின் இங்கிலாந்து நாட்டின் டாப் 20 கோடீஸ்வரர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது.

 

hinduja brothers top britains wealthiest person list

 

 

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா குழும தலைவர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா முதல் இடத்தை பிடித்துள்ளனர். அவர்களின் மொத்த சொத்து மதிப்பு, 22 பில்லியன் பவுண்ட் ஆகும்.

இவர்களுக்கு அடுத்து மும்பையில் பிறந்து இங்கிலாந்தில் தொழில் நடத்தும் டேவிட் மற்றும் சைமன் ரூபன் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தலைவர் அனில் அகர்வால் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.

இதன் மூலம் இங்கிலாந்து தொழில்துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக வணிக பார்வையாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 

முதல் 10 இடத்தை பெற்றவர்கள்:

1. ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ( Sri and Gopi Hinduja) 
2. டேவிட் மற்றும் சைமன் ரூபன் ( David and Simon Reuben)
3. ஜிம் ரேட்க்ளிஃப் (Jim Ratcliffe)
4. லென் ப்ளவாட்னிக்  (Len Blavatnik)
5. ஜேம்ஸ் டைசன் மற்றும் குடும்பத்தினர் (James Dyson and family)
6. கிர்ஸ்டன் மற்றும் ஜார்ன் ராசிங் (Kirsten and Jorn Rausing)
7. சார்லேன் டி கார்வாலோ (Charlene de Carvalho-Heineken)
8.அலிஷர் உஸ்மோனோவ் (Alisher Usmanov)
9. ரோமன் ஆப்ரமோவிட்ச் (Roman Abramovich)
10. மைக்கேல் ஃப்ர்ட்மேன் (Mikhail Fridman)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.