திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் 5 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பகுதியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ...
நான் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திண்டுக்கல், கொடைக்கானல், தாண்டிக்குடி மற்றும் தமிழகமெங்கும் உள்ள வனப்பகுதிகளில் மரம் கடத்தல் கிடையாது. தற்போது மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவு இல்லாமல் பட்டா நிலங்களில் மரம் எடுக்க முடியாது. வனத்துறையை பொருத்தவரை தவறு செய்யாத அதிகாரிகள் மட்டும்தான் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைக்கு அருகில் உள்ளது சிறுமலை. இந்த சிறுமலையில் வளமான பல்லுயிர் வகை காடுகளும், அதேநேரத்தில் நடு மலைப்பகுதியில் வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளன. இங்கு வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் காபி தோட்டங்கள், பழத்தோட்டங்கள், பல காய்கறி பயிர்களை பயிரிடுதல் ஆகியவற்றின் விளைவாக சிறுமலையில் உள்ள அரிய வகை தாவரங்களும் அறிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன.
சிறுமலையில் தாவரங்கள் கணக்கெடுப்பு ஆய்வின்படி தென்னிந்தியாவில் தாவர வகையில் 536 உயிர் தாவரங்களையும் 895 சிற்பங்களையும் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிறுமலைப்பகுதியில் காட்டெருமை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம்பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, ஆந்தை என பல்லுயிர் வாழும் பசுஞ்சோலை சிறுமலை காடாகும். மேலும் சிறுமலையில் சீதோஷண நிலையும் மற்றும் பசுமை நிறைந்த புல்வெளிகளும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளது.
மேலும் சிறு மலைப்பகுதி பல்வேறு மருத்துவ மூலிகைகளையும், அரிய வகை மற்றும் அழிந்து வரும் மரங்களையும் உள்ளடக்கிய பகுதி என்பதால் இங்கு பல்லுயிர் பெருக்க பூங்கா அமைப்பதற்கு ஏதுவான இடம் ஆகும். வளர்ந்து வரும் நகரங்களில் நகர்ப்புறங்களில் இறந்த பன்முகத்தன்மையை மீட்டெடுக்கும் விதமாக அரிதான மற்றும் அழியும் தருவாயில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் சிறுமலையில் 150 ஏக்கர் பரப்பளவில் அஞ்சு கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டு விட்டார்கள்.
சிறுமலை ஊராட்சியில் இருந்து வள்ளியூர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி வரை உள்ள 7.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு வசதிகள் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதுபோன்ற ஏழுமலை பகுதியை சுற்றுலா தளமாக மேம்படுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது என்றுகூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், திண்டுக்கல் மாநகர முன்னாள் மேயர் மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் தலைமை வனக்காவலர் திருநாவுக்கரசு, மாவட்ட வன அலுவலர்கள் தேஜஸ்வி, அன்பு மற்றும் அமைச்சர் சீனிவாசன் மகன் ராஜ் மோகன், ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் உள்பட அதிகாரிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.