Skip to main content

 விடுதலை சிறுத்தை பிரமுகர் குடோனில் தடை செய்யப்பட்ட 4 டன் போதை பாக்குகள்

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

 

வேலூர் மாநகரம் சைதாப்பேட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளராக உள்ளார் முகமது இப்ராகிம். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோனில் ஜீன் 20ந்தேதி குற்ற நுண்ணரிவு பிரிவு போலிஸார் திடீரென ஆய்வு செய்தனர். 

v

ஆய்வில் அந்த குடோனில் இருந்து 4 டன் அளவுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் விற்பனைக்கு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதை விற்பனை செய்தது யார், இந்த குடோனில் இருந்து எங்கெங்கு விற்பனைக்கு செல்கிறது போன்ற விபரங்களை குற்ற நுண்ணரிவு பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

v

4 டன் அளவுள்ள இந்த போதை பாக்குகள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பிலேயே. இதுப்பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றனர். சம்மந்தப்பட்ட முகமது இப்ராகிமிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்