Skip to main content

பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது!

Published on 13/10/2020 | Edited on 14/10/2020
incident in parangkipettai

 

கடலூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீஸாருக்கு செல்போன் ஒன்று கிடைத்தது. இதில்  5 நாட்டு துப்பாக்கி படங்கள் இருந்தன. இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்  விசாரிக்க உத்தரவிட்டார்.

கடந்த ஒரு வாரமாக சைபர் கிரைம் போலீஸார் இது குறித்து ரகசிய விசாரணை நடத்தினர். இந்த நிலையில் செவ்வாய் கிழமை அதிகாலை  கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு படையின் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையிலான போலீஸார் பரங்கிப்பேட்டை அக்கா சைக்கா தெருவில் உள்ள இஸ்மாயில் மகன்  அலிபாய் என்கின்ற  முகமது அலி(52), அவரது மகன் முகம்மது பக்ருதீன் அலி(28) ஆகியோரை அழைத்துச் சென்று மாலை வரை தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் ஐந்து நாட்டுத் துப்பாக்கிகள் இருப்பதை விசாரணையில் தெரியவந்தது

இதனைத்தொடர்ந்து இருவரையும் மாவட்டகுற்றபிரிவு போலீஸார் பரங்கிப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பரங்கிப்பேட்டை போலீஸார் இருவர் மீதும் ஆயுதம் வைத்திருந்த சட்டப்பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்து கைது  செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து  5 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


 

 

சார்ந்த செய்திகள்