Skip to main content

மர்ம காய்ச்சலால் பெண் பலி... மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதி

Published on 30/09/2018 | Edited on 30/09/2018
Female death by mysterious fever



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, பாலக்குடி கிராமத்தில் மர்ம காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

 சென்னையிலிருந்து பாலக்குடிக்கு ஒரு விழாவுக்கு வந்த ராணிக்கு திடீரென ஏற்பட்ட காய்ச்சலுக்கு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை சென்ற சில நாளில் 28 ந் தேதி உயிரிழந்தார். 
 


இதுவரை என்ன காய்ச்சலால் ராணி உயிரிழந்தார், மக்கள் பாதிப்படைந்தது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். ஆனால் வைரஸ் காய்ச்சல் என்ற பதில் மட்டுமே சொல்லப்படுகிறது.
 ராணியின் இறப்பு அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

மேலும் ராணியின் உறவினர்கள் பலருக்கும் இந்த காய்ச்சல் பற்றிக் கொண்டுள்ளது.
 

 மணமேல்குடி அரசு மருத்துவமனையிலும், பல ஊர்களிலும் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
 

தற்போது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சிலர் சிகிச்சையில் உள்ளனர். மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலம் பலர் பல மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


இது குறித்து பிரபு துரைராசு கூறும்போது, சென்னையிலிருந்து ஊருக்கு வந்த ராணிக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு அவரை பார்த்துக் கொண்ட உறவினர்களுக்கும் பரவியுள்ளது. ராணி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இது என்ன வகையான காய்ச்சல் என்று இதுவரை சொல்ல மறுக்கிறார்கள். எங்கள் ஊரில் பரவும் இந்த மர்ம காய்ச்சலை தடுக்க தமிழக அரசு மருத்துவ குழுவை அனுப்பி ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

  

காய்ச்சல் பலி முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தொடங்குகிறது. சுகாதார துறை விரைந்து செயல்பட்டால் காய்ச்சல் இறப்புகளை தடுக்கலாம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொளத்தூரில் மர்ம பொருள் வெடிப்பு; போலீசார் விசாரணை!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Mysterious substance explosion in Kolathur

கொளத்தூரில் வீடு ஒன்றில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூர் முருகன் நகர் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - சிவப்பிரியா தம்பதி. இவர்களுக்கு ஆதித்ய பிரணவ் என்ற மகன் உள்ளார். அவர் பிளஸ் டூ படித்து வந்தார்.  அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட  ஆதித்ய பிரணவ் பல்வேறு கெமிக்கல்கள் பயன்படுத்தி கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் இருந்து திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவன் ஆதித்ய பிரணவ் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பாக வேதிப் பொருட்களை பயன்படுத்திய போது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் அதே வீட்டில் மர்மப் பொருள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு தீயணைப்பு வாகனமும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிகப்படியான போலீசார் அங்கு குவிந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மந்திரம் போடும் தொழிலில் போட்டி; கொலை செய்த அண்ணன், தம்பி கைது

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Professional Magic Casting Competition; brothers arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ராஜாஜி குளக்கரை தெருவை சேர்ந்த பட்டுத்தறி நெசவுத் தொழிலாளி சீனிவாசன் (40 ) என்பவரை காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக சுத்தியால் தலையில் அடித்ததில் பலத்த காயமடைந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

வாலாஜாபேட்டை ராஜாஜி குளக்கரை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (40 ). பட்டுத் தறி நெசவு தொழிலாளியாக உள்ளார். மேலும் காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலையும் செய்து வந்தார். இவரது மனைவி குமாரி( 35 ). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன்களான பிரகாஷ்(35),  கிருஷ்ணா(30) ஆகியோருக்கும், சீனிவாசனுக்கும் இடையே மந்திரம் போடும் தொழில் காரணமாக போட்டி இருந்து வந்துள்ளது. அதேவேளையில் கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் திருவிழா நடந்த போது,  சீனிவாசன் சாமியாடி அருள்வாக்கு சொல்லி உள்ளார். இது தொடர்பாக சீனிவாசனுக்கும், பிரகாஷ், கிருஷ்ணா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க, பிரகாஷ் குடும்பத்தில் நெசவுத்தொழில் நலிவடைந்ததாகவும் கூறப்படுகிறது . இதற்கு முக்கிய காரணம் சீனிவாசன் தான் என்று கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி திடீரென சீனிவாசனிடம் பிரகாஷ், கிருஷ்ணா ஆகியோர் வந்து உனக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது.  மந்திரம் போடுகிறோம் வா என்று சொல்லி சீனிவாசனை பிரகாஷ் தன்னுடைய வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சீனிவாசனை  ஆபாசமாக பேசி உன்னால் தான் எங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது என்று பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரத்தில் கிருஷ்ணா தான் வைத்திருந்த சுத்தியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பிரகாஷ் சீனிவாசன் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி எட்டி உதைத்துள்ளார். இதில் ரத்த காயங்களுடன் வெளியே வந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இன்று இறந்தார்.  இதுகுறித்து சீனிவாசனின் மனைவி குமாரி வாலாஜாபேட்டை காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல்துறையினர் ஏற்கனவே கிருஷ்ணா,  அவரது தம்பி பிரகாஷ் ஆகியோரை அடிதடி வழக்கில் கைது செய்துள்ள நிலையில், சீனிவாசன் இறந்த நிலையில் கொலை வழக்காக மாற்றியுள்ளனர். 

இந்தநிலையில் பிரகாஷ் வீட்டை நேற்றிரவு மர்ம நபர்கள் அடித்து உடைத்ததோடு தீ வைத்துள்ளனர். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் மேற்கூரை ஆகியவற்றை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. தொழில் போட்டி காரணமாக பட்டுத்தறி நெசவு தொழிலாளியை சுத்தியால் அடித்து கொலை செய்த அண்ணன் தம்பி கொலை செய்த சம்பவம் வாலாஜாபேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.