Skip to main content

தே.மு.தி.க. வந்தால்தான் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்ற நிலை இல்லை: தம்பிதுரை பேட்டி

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

கரூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை தனது தொகுதியில் மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை அருகே அன்னவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை மக்களின் குறைகளை கேட்க முகாம் அமைத்திருந்தார். 
 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 

அ.தி.மு.க. பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளது. எங்கள் அணிக்கு தே.மு.தி.க. வந்தால் தான் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்ற நிலையில்லை. இருப்பினும் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே எங்களது ஆவல். ஒரு கட்சி என்றால் தேர்தல் நேரத்தில் பல கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வழக்கம். ஆனால் தே.மு.தி.க., தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறித்து துரைமுருகன் விமர்சித்திருப்பது அநாகரிகமான செயல்.


 

Thambi Durai



ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பா.ஜ.க., அ.தி.மு.க. நட்புடன் தான் இருந்து வருகிறது. இருந்தாலும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் தான் நானும் அவர்களை விமர்சனம் செய்தேன். மத்திய பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை. அ.தி.மு.க.வோடு விருப்பப்பட்டே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. இவ்வாறு கூறினார்.


 

சார்ந்த செய்திகள்