Skip to main content

மண்டையை உடைத்து தான் மந்திரியானேன்... என் மேல் இவ்ளோ கேஸ் இருக்கு... அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு! 

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "நடிகர் விஜயிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்துதான். 'ரஜினி மலை, அஜித் தலை' என்றார். மேலும் அதிமுக ஆட்சியின் கடைசி பட்ஜெட் அல்ல; அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சிக்கான முதல் பட்ஜெட். வரி இல்லாத யாரையும் பாதிக்காத முத்தான பட்ஜெட் என்று தெரிவித்தார்.

  admk



இதனையடுத்து  ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  பேசும் போது, நான் சிறுவயதாக இருக்கும்போது யாரையாவது மண்டையை உடைத்து விட்டு வந்தால், எனது தாயார் என்னை வீட்டிற்குள் இருக்குமாறு கூறுவார். யாராவது வந்து உங்கள் பையன் வந்தானா? என்று கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவார். என் தாய் என்னை பாசத்தோடு வளர்த்தார். நான் தாய்க்கு கட்டுப்பட்டவன். அதோடு மண்டை உடைப்பு உள்ளிட்ட 16 கேஸ்களை சந்தித்தவன். இதனால் தான் மந்திரியானேன். 16 கேஸ்களில் ஒரு கேஸ்க்கு கேரளா மற்றும் எஸ்டேட் சென்று விட்டு 2 ஆண்டுகள் கழித்துத்தான் ஊருக்கு வந்தேன்.அதிமுகவினர் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் அல்ல. எம்ஜிஆரின் கையை பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடுதான் இருப்போம். அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது. அதிமுககாரன், விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான் என்று பேசியுள்ளார். அதிமுக அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.   

 

சார்ந்த செய்திகள்