Skip to main content

அமித்ஷாவால் உச்சகட்ட டென்ஷனில் அதிமுக! பறிபோகிறதா வெற்றி?

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி(நேற்று) நடைபெற்றது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார். வேலூரில் நேற்று 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை வரை 72% வாக்குப் பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
 

admk



காலை வாக்குப்பதிவு தொடங்கிய போது மிக குறைந்த சதவிகித வாக்குப்பதிவு மட்டுமே பதிவானது. இதனால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சற்று கலக்கத்தில் இருந்தன. காலையில் வாக்குப்பதிவு குறைவாக பதிவானதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, நேற்றய தினம் மாநிலங்களவையில் அமித்ஷா, காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப் பிரிவை நீக்கி அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த செய்தி வெளியீட்டுக்கு பின்னரே வேலூர் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக பதிவாக ஆரம்பித்தது. வேலூர் மக்களவைத் தொகுதியில் முஸ்லிம்கள் வாக்காளர்கள் அதிமாக இருப்பதால், அவர்கள் மத்தியிலும் இந்த காஷ்மீர் பிரச்சினை தீவிரமாகப் பரவியது. 


இதன் எதிரொலியாக மதியத்துக்கு மேல் முஸ்லீம் வாக்காளர்கள் அதிக அளவு வாக்களித்ததாக சொல்லப்படுகிறது. காஷ்மீர் பிரச்னை கண்டிப்பாக வேலூர் தேர்தலில் எதிரொலித்துருக்கும் என்று அத்தொகுதி மக்கள் பரவலாக பேசி வருகின்றனர். இதனால் பெருவாரியான முஸ்லீம் வாக்குகள் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிராக விழுந்திருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர். இது அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே முத்தலாக் பிரச்சினைக்கு ஓ.பி.ஆர். ஆதரவு அளித்ததால் அதிமுகவுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் அமித்ஷா நேற்று வெளியிட்ட அறிவிப்பால் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர், நிர்வாகிகள் உச்ச கட்ட டென்ஷனில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்