Published on 04/10/2020 | Edited on 04/10/2020

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவா மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தைத் தவிர வேறு எங்கும் போராட்டம் நடக்கவில்லை. பஞ்சாப்பில் கூட காங்கிரஸ் ஆட்சியின் கரணமாகதான் போராட்டம் நடக்கிறது; இல்லையெனில் நடக்காது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை" என்றார்.